SELANGOR

அரசியல் லாபத்திற்காக மலாய் பொருளாதாரத்தை கீழறுப்பதா?

ஷா ஆலம், ஜன.21:

அரசியல் லாபத்திற்காக மலாய்க்காரர்களின் பொருளாதாரத்தை கீழறுக்கும் நோக்கம் கொண்டுள்ள அரசாங்க எதிர்ப்பு தரப்பினர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மலாய்க்காரர்களின் பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கத்தை ‘வில்லனாக’ சித்தரிக்கும் எண்ணத்தில் மலாய்க்காரர்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் இத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்று மலேசிய இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டு அறவாரியத்தின் அறங்காவலர் டாக்டர் ரோஸ்லி யாக்கோப் கூறினார்.

நாட்டை 60 வருடம் ஆண்டுகள் ஆண்ட தேசிய முன்னணீயின் புதிய பொருளாதார திட்டம் (டிஇபி) உட்பட பல பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன.

14ஆவது பொதுத் தேர்தலில் வென்று ஆட்சி பீடத்தில் அமர்ந்து 8 மாதங்களில் மலாய்க்காரர்களின் பொருளாதாரத்தை பக்காத்தான் அரசாங்கம் வீழ்த்திவிட்டதாக அறிவுக்குப் பொருந்தாத கூற்றை இவர்கள் இப்போது கூறி வருகின்றன.

உண்மையில் மலாய்க்காரர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தவொரு உதவியையும் செய்ய விரும்பாத இத்தரப்பு, மலாய்க்காரர்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு பக்காத்தான் அரசாங்கம்தான் காரணம் என்று வீண்பழி போடுவதே அதன் நோக்கமாகும் என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :