NATIONAL

அஸ்மின்: அரசியல் விவாதங்களை நிறுத்தி, பொருளாதார சீரமைப்பை கவனியுங்கள்

செமிஞ்சே, ஜனவரி 6:

அரசியல் விவாதங்களை உடனடியாக நிறுத்தி, நாட்டின் பொருளாதார  முன்னேற்றத்திற்கும் மக்களின் மேம்பாட்டிலும் அக்கறை செலுத்துமாறு கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அறிவுறுத்தினார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் வெற்றி பெற்று மத்திய அரசாங்கத்தை அமைத்த பிறகு நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசியல் சர்ச்சைகளை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

” நாட்டு மக்களுக்கு நாம் கடமை ஆற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு மேலும் நாட்டு கடன் மற்றும் முன்னாள் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அரசியல் கட்சியினரின் விவாதங்களில் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. ஒருவரை ஒருவர் குறை கூறுவது மற்றும் கடன்களை பற்றி பேசுவதை மக்கள் மத்தியில் எடுபடாது, ” என எகோ மஜிஸ்திக் நிறுவனத்தின் ‘ரூமா சிலாங்கூர் கூ’ வீடுகளின் சாவிகள் வழங்கிய நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் கூறினார்.

பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் அலி, பாக்காத்தான் அரசாங்கம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் நடவடிக்கையில் ஈடுபட முனைப்புடன் செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.


Pengarang :