dav
NATIONAL

இன பேதம் பார்க்காதீர் – கெ அடிலான் மகளிர் அணிக்கு அறிவுறுத்து

பெட்டாலிங் ஜெயா, ஜன.14:
வளப்பம் மற்றும் மேம்பாடு நோக்கி நடைபோடும் வேளையில் இனபேதம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று சிலாங்கூர் கெ அடிலான் மகளிர் அணியினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மலாய்க்காரர், சீனர் மற்றும் இந்தியர் எனும் பேதமில்லாமல் அனைத்து இனத்துக்கும் தலைமைத் தாங்கும் பண்புடன் ஒவ்வொரு தலைவரும் சேவையாற்ற வேண்டும் என்று சிலாங்கூர் கெ அடிலான் மகளிர் தலைவி டாக்டர் டாரோயா அல்வி வலியுறுத்தினார்.

இக்கட்சியில் குறிப்பிட்ட ஓர் இனம் என்றில்லாமல் அனைத்து மலேசியருக்காகவும் போராட வேண்டும். இனம் அல்லது நிறம் என்ற பேதம் ஏதுமுமின்றி அனைவரையும் ஒரு குடும்பமாக கருதி சேவையாற்ற வேண்டும் என்றார் அவர்.

இந்த மனநிலை ஏற்பட்டால், அனைத்து இனத்தவரையும் ஒன்றினைக்கும் நாடாக “மலேசியா பாருவை” உருவாக்கும் முயற்சியில் கெ அடிலான் மகளிர் அணி முக்கிய பங்களிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :