SELANGOR

எல்பிஎச்எஸ்: சிலாங்கூர்கூ வீடுகளை வாடகைக்கு விடும் நடவடிக்கை முடக்கப்படும்

ஷா ஆலம், ஜனவரி 9:

சிலாங்கூர்கூ வீடுகளை வாடகைக்கு விடும் நடவடிக்கையை முடக்குவது குறித்து ஊராட்சி மன்ற அமலாக்க கட்டட ஆணையத்துடன் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் (எல்பிஎச்எஸ்) விவாதிக்கும்.
இது குடியிருப்பாளர்களின் நலன் மற்றும் சுகாதார கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வகை செய்யும் நிர்வாக அமைப்பின் 2015ஆம் ஆண்டு நிர்மாணிப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தின் செக்‌ஷன் 3 (4)க்கு ஏற்ப அமைந்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் நஸ்மி ஓஸ்மான் கூறினார்.

மூன்றாம் தரப்பு அல்லது அந்நிய நாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்களுக்கு எல்பிஎச்எஸ் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கும் என்றார் அவர்.
இவ்விகாரத்தை எல்பிஎச்எஸ் கடுமையாக கருதுவதாக அவர் சொன்னார்.

இது தவிர்த்து, இந்தத் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ள ஊராட்சி மன்ற அமலாக்கத் தரப்பின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :