SELANGOR

ஐடபள்யூபி, பிடபள்யூபி: மகளிருக்கான கொள்கை இயற்றும் திறனை மேம்படுத்தும்

பெட்டாலிங் ஜெயா, ஜன.15:

மகளிர் மேம்பாட்டு கழகம் (ஐடபள்யூபி) மற்றும் மகளிர் மேம்பாட்டு மையம் (பிடபள்யூபி) ஆகிய அமைப்புகள் மூலம் மகளிரின் அதிகார ஆற்றலை தீவிரப்படுத்த மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது.

தலைமைத்துவ திறன், கட்டுமான ஆற்றல் மற்றும் அடிப்படை ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் பிடபள்யூ முக்கிய தளமாக விளங்கும் என்று சுகாதார, சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் கூறினார்.

இது சமூக, மாவட்ட மற்றும் மாநில அளவில் மகளிரின் தலைமைத்துவத்தை படிப்படியாக உயர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும் என்றார் அவர்.

அடிமட்ட நிலையில் உள்ள மகளிரையும் தலைவர்களாக உருவாக்கி அரசியலுக்கு அழைத்து வர இந்நடவடிக்கை அவசியமாகும் என்றும் அவர் சொன்னார்.

இதன் மூலம் அனைத்து நிலையில் உள்ள மகளிரையும் கொள்கைகளை உருவாக்கும் உயர் தலைமைத்துவ நிலைக்கு மேம்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :