SELANGOR

கட்டுப்படி வீடுகளை நிர்மாணிக்க மத்திய அரசுக்கு உதவும் கடப்பாடு

புத்ரா ஜெயா, ஜனவரி 8:

மக்களுக்கு கட்டுப்படி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசாங்கம் உறுதுணையாக இருக்கும்.
இதன் அடிப்படையில் இன்று காலை நடைபெற்ற தேசிய மக்கள் கட்டுப்படி வீட்டுடமைத் திட்ட மன்றக் கூட்டத்தில் தேசியத் தலைவர்களுடன் தாமும் பங்கேற்றதாக மந்திரி பெசார் அமிருடின் ஷா ஓர் அறிக்கையில் கூறினார்.

இக்கூட்டத்திற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிசா இஸ்மாயில், வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் சுரைடா கமாருடின், பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, குடிநீர், நில மற்றும் மூலப் பொருள் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் நடுத்தர வருமானம் (எம்40) மற்றும் குறைந்த வருமானம் (பி40) பெறும் மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் நிறைவேற இக்கூட்டம் மிகவும் அவசியமானதாகும் என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் சுரைடா தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் கட்டுப்படி வீடுகளை நிர்மாணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி மற்றும் நடவடிக்கைகளை தமது அமைச்சு மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.


Pengarang :