SELANGOR

காசிங் மேம்பாலத்தில் தற்காலிக பாதை திறக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஜன.24:

போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் ஜாலான் டெம்பளர் மற்றும் பழைய கிள்ளான் சாலை சந்திப்புக்கும் காசிங் மேம்பாலத்திற்கும் இடையே தற்காலிக எதிர்திசை பாதை ஒன்று திறக்கப்படவுள்ளது.

இந்த தற்காலிக பாதை ஜனவரி 28 தொடங்கி மார்ச் 18 வரையில் தினந்தோறும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக பொறியியல் துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா சாலை பயனீட்டாளர்களிடம் இருந்து இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கிடைத்த பின்னரே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மழை மற்றும் மேக மூட்ட நேரத்திலும் இந்த வழி திறக்கப்படாது. இந்த பாதை மீண்டும் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனை பெறப்படும்.

மேலும், இந்த பாதையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள், அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் அமலாக்க அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசாரின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியது.

மேலும் விபரங்கள் அறிய விரும்பும் பொது மக்கள், எம்பிபிஜே பொறியியல் துறையுடன் 03-79584221 அல்லது அவசர அழைப்பு எண் 03-79542020 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :