SELANGOR

குப்பைகளைக் கண்டபடி வீசுவதா? கடை உரிமையாளரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பார்!!

கிள்ளான், ஜனவரி 8:

பெக்கான் ஸ்ரீ அண்டலாஸில் விருப்பம்போல் கடைகளுக்குப் பின்புறம் குப்பைகளை வீசும் கடை உரிமையாளரை சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஸவாவி அகமட் முக்னி விரைவில் சந்திக்கவிருக்கிறார்.

கடை வீதிக்குப் பின்புறப் பகுதிகள் குப்பைகள் வீசப்பட்டும் காலியான போத்தல்கள் கால்வாயை அடைத்துக் கொள்ளவும் காரணமாக அந்த கடை உரிமையாளரின் தன்மூப்பான நடவடிக்கை மிகவும் வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.

“ நிலைமையை மோசமாக்கும் வகையில், போதைப் பித்தர்கள் இந்தப் பகுதியை தங்கள் பேட்டையாக பயன்படுத்தி வருகின்றனர்.”
இந்த இடத்தைப் பார்வையிட்டதியில் இப்பகுதியைத் தங்கள் குடியிருப்பாக பயன்படுத்தி வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இது சுற்றுப்புற பகுதியில் வசிப்பவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சொன்னார்.

இப்பகுதியில் ஏற்பட்டுள்ள இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒரு செயற்குழுவை அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாக முகமட் ஸவாவி தெரிவித்தார்.
சுத்தமான மற்றும் பாதுகாப்பு நிறைந்த பகுதி என்ற பெக்கான் ஸ்ரீ அண்டலாஸின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்க இது அவசியமாகும்.

பல்வேறு வணிக நடவடிக்கைகள் நடைபெறும் இப்பகுதி மிகவும் விசாலமானதாக இருப்பதால், இப்பிரச்னைக்குத் தீர்வு காண அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்றார் அவர்.


Pengarang :