Uncategorized @ta

சட்டவிரோத நெகிழி இறக்குமதியைத் தடுக்க கடுமையான நடைமுறைகளை ஏற்படுத்துவீர் !

கிள்ளான், ஜன.23:

வீடமைப்பு ஊராட்சி துறை, எரிசக்தி தொழில்நுட்பம், அறிவியல், பருவ கால மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் துறை ஆகியவை சிலாங்கூருக்குள் சட்ட விரோத நெகிழி பொருட்கள் நுழைவதைத் தடுப்பதற்கு ஏதுவாக கடுமையான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

நிலம் மற்றும் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் மாநிலத்திற்கு குறிப்பிட்ட அளவு அதிகாரம் மட்டுமே உள்ளது என்று ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சி குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த கடுமையான கொள்கை திட்டம் ஒன்றை வரைய சம்பந்தப்பட்ட இரு துறைகளின் ஒத்துழைப்பை மாநில அரசு பெரிதும் எதிர்பார்ப்பதாக தெலுக் கோங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் கூறினார்.

ஆயினும், சட்ட விரோதமாக நெகிழியை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசாங்கம் ஒரு போதும் தயங்காது என்றார் அவ


Pengarang :