PBT

ஜாலான் ரயில்வே மோட்டார் சைக்கிள் சாலை 3 வாரங்களுக்கு மூடப்படும்

 

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் ரயில்வே 1/2 தொடங்கி ஜாலான் பிஜே எஸ் 1/26 வரையிலான சாலை வரும் திங்கள்கிழமை தொடங்கி அடுத்த மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என்று பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவித்தது.

இந்த சாலையில் பழைய மோட்டார் சைக்கிள் பாலத்தையும் புதிய பாலத்தையும் இணைக்கும் பணிகளுக்காக இது மூடப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேம்பாட்டு பணிகளுக்காக இந்த சாலை ஜனவரி 28ஆம் தேதி வரையில் மூடப்படுவதால், மோட்டார் சைக்கிளோட்டிகள் ஜாலான் டெம்பளர் – பந்தாய் பாரு நெடுஞ்சாலையில் உள்ள மாற்று வழியைப் பயன்டுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இது குறித்து மேலும் விளக்கம் அறிய விரும்பும் பயனீட்டாளர்கள் எம்பிபிஜே பொருளியியல் துறையின் சொத்து மற்றும் உட்கட்டமைப்பு பிரிவுடன் 03-7958422 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :