NATIONAL

தங்கும்வசதி கொண்ட பள்ளிகளுக்கான தினசரி உணவு விகிதம் குறைக்கப்பட்டதா? கல்வி அமைச்சு மறுப்பு

குளுவாங், ஜன.28:

முழு தங்கும் வசதி கொண்ட பள்ளிகளுக்கான (எஸ்பிபி) தினசரி உணவு விகிதம் குறைக்கப்பட்டதாக கூறப்படுவதை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

இந்தப் பள்ளிகளில் அன்றாட உணவு விகிதம் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் தெரிவித்தார்.

இந்த அவதூறை மறுக்கும் வகையில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றார் அவர்.

‘அறிக்கை விடுவதற்கு முன்பு டத்தோஸ்ரீ நஜீப் வீட்டுப்பாடங்களைச் செய்ய வேண்டும்’ என்று இங்குள்ள துங்கு அப்துல் ஜாலில் இடைநிலைப்பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசினார்.

தினசரி 18 வெள்ளியாக இருந்த முழு தங்கும் வசதி கொண்ட பள்ளிகளுக்கான உணவு விகிதத்தை பக்காத்தான் அரசாங்கம் 14 வெள்ளி 50 காசாகக் குறைத்து விட்டதாக நஜீப் தனது டுவீட்டரில் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :