NATIONAL

தியாகு கொலை சம்பவம் : குற்றவாளிகளின் துணிச்சலைக் காட்டுகிறது

ஷா ஆலம், ஜன.11:

பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஒதுக்குப்புறப் பகுதிகள் மற்றும் வீடமைப்பு பகுதிகளில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரச மலேசிய போலீஸ் படை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கெஅடிலான் கட்சியின் இளைஞர் பகுதி உறுப்பினர் எம்.தியாகுவை பட்டப்பகலில் குத்திக் கொலைச் செய்த சம்பவமானது குற்றவாளிகள் மிகவும் துணிச்சலாக இருக்கின்றனர் என்பதை நிரூபிப்பதாக ரவாங் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுவா வெய் கியாட் கூறினார்.

அது ஒரு மிகவும் கொடூரமான செயலாகும். மனித உயிர் சம்பந்தப்பட்டுள்ள இவ்விவகாரத்தை சாதாரணமாக கருதக் கூடாது.

பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் ஒருவரை கொலை செய்ய குற்றவாளிகள் துணிந்துவிட்டனர் என்றால் ஆள் நடமாட்டம் இன்றி இருட்டான பகுதிகளின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

இதன் பின்னர் இனி எத்தனை உயிர்கள் இந்தக் கயவர்களுக்கு பலியாகுமோ என்று கெஅடிலான் இளைஞர் அமைப்பின் செயலாளருமான சுவா வினவினார்.


Pengarang :