SELANGOR

தூய்மையைப் பேணத் தவறும் வீட்டு உரிமையாளருக்கு வெ.500 அபராதம்

கிள்ளான், ஜன.17:

சுற்றுப்புறப் பகுதியில் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தி டிங்கி காய்ச்சல் பரவுவதற்கு வழிவகுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு 500 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

ஏடிஸ் கொசுக்கள் நிறைந்த பகுதிகளைக் கண்டுபிடித்தால், அதற்கு காரணமானவர்களுக்கு அபராதத்துடன் நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்று கிள்ளான் வட்டார சுகாதார அதிகாரி டாக்டர் மசித்தா முகமட் கூறினார்.

“டிங்கி பரவலைத் தடுக்க இந்த விவகாரத்தை மக்கள் கடுமையாக கருத வேண்டும்.”

கிள்ளான் சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகளில் ஏடிஸ் கொசுக்கள் இருப்பதைச் சோதனையிட்டு அவற்றை அழிக்கும் திட்டத்தை தங்கள் தரப்பு விரைவில் அமல்படுத்தவுள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோவுடன் சந்திப்பு நடத்திய பின்னர் டாக்டர் மசித்தா கூறினார்.


Pengarang :