NATIONAL

தொகுதிகள் இல்லாத மகளிர் சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குவீர்

பெட்டாலிங் ஜெயா, ஜன.15:

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் உள்ள மாநிலங்கள், தேர்தல் இன்றி சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் வகையில் சட்டவிதிகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின் போது ஐடபள்யூ கழகம் மேற்கொண்ட ஆயவின்படி மளிருக்கான கோட்டா நிறைவேற இன்னும் அதிக இடைவெளி இருப்பது தெரிய வந்துள்ளதை அமானா கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் டாக்டர் சித்தி மரியா மமுட் சுட்டிக் காட்டினார்.

மகளிரை ஓரங்கட்டும் நடப்பில் உள்ள கொள்கைகளை அரிசியல் கட்சிகள் தொடர்ந்தால், ஆண் பெண் இரு பாலரும் சரிசம அளிவில் (50-50) இருக்கும் நிலையை அடைய 145 ஆண்டுகள் ஆகும் என்று அந்த ஆய்வு கணித்துள்ளது.

இதனிடையே, கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற தொகுதிகளில் 14.4 விழுக்காடு தொகுதிகள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் 12.3 விழுக்காடு தொகுதிகள் மட்டுமே பெண்கள் வசம் உள்ளன.

நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு இந்த அளவில் இருக்கின்ற நிலையில் இதே கொள்கைகள் தொடர்ந்தால், 50:50 எனும் நிலையை அடைய 145 ஆண்டுகள் ஆகும்.

இதன் காரணமாகவே, அரசியலில் பெண்களின் ஈடுபாடு மிகவும் குறைவாக உள்ளது. பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் வகையில், தொகுதிகள் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்த திரெங்கானு மாநில அரசாங்கத்தின் முயற்சியை பிற மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.


Pengarang :