SELANGOR

நில வரி வசூல் கடந்தாண்டு குறைந்தது இவ்வாண்டு மீண்டும் அதிகரிப்பு!

ஷா ஆலம், ஜன.29:

நில வரி மூலம் சிலாங்கூர் அரசாங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு பெற்ற தொகை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 340 மில்லியன் வெள்ளி குறைவாகும். 2017ஆம் ஆண்டு 1.54 பில்லியன் வெள்ளி பெறப்பட்ட வேளையில் கடந்த ஆண்டு 736.6 மில்லியன் வெள்ளி மட்டுமே வசூலானது.

14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டதே இந்த வருவாய் குறைவுக்கு முக்கிய காரணம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த ஆண்டு முழுவதும் பொருளாதாரம் மந்தமாக இருந்ததும் வரி தொடர்பான கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் நிலவிய குழப்பமும் இந்தச் சரிவுக்கான இதர காரணங்களாகும்.

எனினும், 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வரிக் கட்டணம் செலுத்துவது மீண்டும் அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :