SELANGOR

பத்தாண்டுகளுக்குப் பிறகு மந்திரி பெசார் தலைமையில் மாநில மேம்பாட்டு செயற்குழு கூட்டம்

பத்துகேவ்ஸ், ஜன.21:

பத்தாண்டுகளுக்குப் பிறகு, மாநில மேம்பாட்டு செயற்குழு கூட்டம் மீண்டும் சிலாங்கூர் மந்திரி பெசார் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்னர் இக்கூட்டம் பிரதமர் துறை அதிகாரத்துக்கு உட்பட்டு இருந்தது.

மத்திய அரசு வழங்க வேண்டிய ஒதுக்கீடு மற்றும் சிலாங்கூரில் மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாநில் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வால் கிடைத்த நன்மை இதுவாகும். முன்பு பிரதமர் துறையின் கீழ் இயங்கிய செயற்குழுவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வந்ததோடு மேம்பாட்டு திட்டங்களைத் திட்டமிடும் கூட்டத்திற்கு மாநில அரசாங்கத்தை முந்தைய மத்திய அரசு அழைத்ததில்லை என்றார் அவர்.

எனவே, பல மேம்பாட்டுத் திட்டங்கள் சரிசமமாக இருந்ததில்லை. கடந்த பத்தாண்டுகளாக இக்கூட்டங்களுக்கு மாநில மந்திரி பெசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது இல்லை. இம்முறை மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து திட்டமிடுவதால், பல மேம்பாட்டு திட்டங்கள் இனி குழப்பங்கள் ஏதுமின்றி சுமூகமாக நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :