NATIONAL

பிஎஸ்பிஏ திட்டத்தின் கீழ் 10,000 அரசு பணியாளர்கள் பயனடைவர்

தஞ்சோங் காராங், ஜன.22:

சிலாங்கூரில் என்44 பிரிவு அரசு ஊழியர்களில் 10 ஆயிரம் பேர் , கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பொது பணி ஊழியர்களுக்கான பெடுலி செஹாட் திட்டத்தில் பதிந்து கொண்டுள்ளனர்.

விபத்து காரணமாக ஏற்படும் மரணம் அல்லது மருத்துவச் செலவுகள் உட்பட நிரந்தர உடல் செயலிழப்பு இழப்பீட்டுக்காக மாநில அரசாங்கம் 1.1 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம், சமூக நலன், மகளிர் குடும்ப மேம்பாட்டு துறை ஆட்சி குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் கூறினார்.

இத்திட்டத்தில் பதிந்து கொள்ள N44 பிரிவு அரசு பணியாளர்கள் விபத்து காரணமாக உயிரிழந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு 10 ஆயிரம் வெள்ளி இழப்பீடு வழங்கப்படும். அதேவேளையில் இவ்விபத்தினால் சம்பந்தப்பட்டவருக்கு நிரந்தர உடல் செயலிழப்பு ஏற்பட்டாலும் அதே தொகை வழங்கப்படும் என்றார் அவர்.

கடந்த ஆண்டு சிலாங்கூரில் மொத்தம் 23 அரசு பணியாளர்கள் விபத்தில் பலியாகியதால், அவர்களின் குடும்பத்தினர் மரண காப்புறுதி தொகையைப் பெற்றனர்.

2019ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக மேலும் 1 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :