NATIONAL

பெக்கா பி40’ மார்ச் முதல் கட்டம் கட்டமாக அமல்

புத்ரா ஜெயா, ஜன.28:

வாழ்க்கைச் செலவின உதவி (பிஎஸ்எச்) பெறுவோர் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான ‘பெக்கா பி40’ எனப்படும் பெடுலி கெசிஹத்தான் திட்டம் வரும் மார்ச் தொடங்கி கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் பெக்கா பி40 வழி 8 லட்சம் பேர் பயனடைவர் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது தெரிவித்தார்.

50 வயதைக் கடந்தோரை எளிதில் தாக்கும் தொற்றா நோயை தொடக்கத்திலேயே கண்டறிவதையும் இத்திட்டம் வலியுறுத்துகிறது என்று சுல்கிப்ளி கூறினார்.

“பிஎஸ்எச் உதவி தொகையைப் பெறுபவர்களும், 50 வயதைத் தாண்டியவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெறுவர். இதற்கு இவர்கள் பதிவு செய்யத் தேவையில்லை” என்றார் அமைச்சர்.

“சுகாதார பரிசோதனை, மருத்துவ சாதனம், புற்றுநோய் சிகிச்சைக்கான உதவிநிதி மற்றும் போக்குவரத்து கட்டணம் ஆகிய நான்கு அனுகூலங்களை பெக்கா பி40 கொண்டுள்ளது” என்று சுல்கிப்ளி மேலும் சொன்னார்.


Pengarang :