NATIONAL

பேங்க் நெகாராவின் அனைத்துலக கையிருப்பு: 101.7 பில்லியன் அமெரிக்க டாலர்

கோலாலம்பூர், ஜன.23:

பேங்க் நெகாரா மலேசியாவின் அனைத்துலக கையிருப்பு 101.7 பில்லியன் அமெரிக்க டாலராக கடந்த ஜனவரி 15 ஆம் தேதியில் இருந்தது. இது கடந்த 2018 டிசம்பர் 31இல் இருந்த கையிறுப்பு தொகையான 101.4 பில்லியன் அமெரிக்க டாலரைக் காட்டிலும் அதிகமாகும்.

7.3 மாத காலம் ஏற்றுமதிகள் ஒத்திவைக்கப்பட்டும் நாட்டின் குறுகிய கால வட்டி 1.0 மடங்காக இருந்த போதிலும், நாட்டின் கையிருப்பு அளவு திருப்திகரமாக உள்ளது என்று பிஎன்எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இந்த அனைத்துலக கையிருப்பு தொகையில் அந்நிய நாணய செலாவணி 95.8 பில்லியன் அமெரிக்க டாலர், அனைத்துலக நாணய நிதியகத்தில் உள்ள கையிருப்பு தொகை 900 மில்லியன் அமெரிக்க டாலர், சிறப்பு மீட்பு உரிமை 1.1 பில்லியன் அமெரிக்க டாலர், தங்கம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் இதர கையிருப்பு சொத்துகள் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியன அடங்கும்.

வங்கியின் கையிருப்பு சொத்துகளில் தங்கம், அந்நிய செலாவணி ஆகியன 420.44 பில்லியன் வெள்ளி, மலேசிய அரசாங்கத்தின் உத்தரவாத பத்திரம் 3.39 பில்லியன் வெள்ளி, நிதியகங்களில் உள்ள சேமிப்பு 1.31 பில்லியன் வெள்ளி, கடன் மற்றும் முன்பணம் 6.95 பில்லியன் வெள்ளி, நிலம் மற்றும் கட்டடங்கள் 4.17 பில்லியன் வெள்ளி மற்றும் 11.618 பில்லியன் வெள்ளி மதிப்பிலான இதர கையிருப்புகளும் அடங்கும் என்று அவ்வறிக்கை கூறியது.


Pengarang :