SELANGOR

பொது மக்களின் விழிப்புணர்ச்சியை கேடிஇபிடபள்யூ மதிக்கிறது

ஷா ஆலம், ஜன.11:

அந்நியத் தொழிலாளி ஒருவரை ஓட்டுநராகப் பயன்படுத்திய தனது துணை குத்தகை நிறுவனத்தை அம்பலப்படுத்திய பொது மக்களுக்கு கேடிஇபிடபள்யூ நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளையில், சமூக ஊடகம் வழியாக பொது மக்கள் மத்தியில் பரவிய இந்த சம்பவம் குறித்து தமது நிறுவனம் வருத்தமடைந்துள்ளதாக இதன் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.

சம்பந்தப்பட்ட துணை குத்தகை நிறுவனத்துக்கு எதிராக கேடிஇபிடபள்யூ நடவடிக்கை எடுத்துள்ளதோடு இது போன்று அந்நியத் தொழிலாளர்களை ஓட்டுநராக வேலைக்கு அமர்த்துவதை விடுத்து வாகனமோட்டும் அனுமதி கொண்ட உள்நாட்டு ஓட்டுநர்களைப் பயன்படுத்தும்படி இதர துணை குத்தகையாளர்களையும் நினைவுறுத்தியதாக அவர் சொன்னார்.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் துணை குத்தகையாளர்கள் மீது அவர்களின் குத்தகையை ரத்து செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :