NATIONAL

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அபரிமித அடைவு நிலை

கோத்தாகினபாலு, ஜன.22:

அரச மலேசிய போலீஸ் படையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு 2018 நான்காம் காலாண்டில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இதே காலக் கட்டத்தில் மொத்தம் 48,582 பேர் இக்குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட வேளையில் கடந்தாண்டு 53,380 பேர் கைதாகினர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் கூறினார்.

மேலும் 2017ஆம் ஆண்டு இதே காலக் கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் 2018 ஆண்டு 231 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இது தவிர்த்து, கடந்த 2017 ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் 5 போதைப் பொருள் தயாரிப்பு கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வேளையில், 2018ஆம் ஆண்டு அதே காலாண்டில் 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றார் அவர்.

இந்தப் பிரிவின் அடைவுநிலை இவ்வாண்டும் தொடரும் என்பதோடு போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :