SELANGOR

மதிப்பீட்டு வரிக் கட்டண வசூல்: எம்பிகே இலக்கை எட்டியது !

கிள்ளான், ஜன.31:

மாநில அரசாங்கம் நிர்ணயித்த 181.7 மில்லியன் வெள்ளி வரி தொகையை வசூலிப்பதில் கிள்ளான் நகராண்மைக்கழகம் வெற்றி பெற்றது. 2018ஆம் ஆண்டு இறுதி வரை வசூலிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் இது 4.4 மில்லியன் வெள்ளி அதிகமாகும்.

கடந்த 2017ஆம் ஆண்டு இதே காலக் கட்டத்தில் வசூலிக்கப்பட்ட 174.6 மில்லியன் வெள்ளியைக் காட்டிலும் இந்தத் தொகை அதிகமாகும் என்று அதன் தலைவர் டத்தோ முகமட் யாசிட் பிடின் கூறினார்.

2017ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட முதல் தவணை நிலமதிப்பீட்டு வரி தொகையை விட 2018ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட தொகை 8 விழுக்காடு அதிகமாகும் என்றும் அவர் சொன்னார்.

வசூலிக்கப்படாத 39.2 மில்லியன் வெள்ளி மதிப்பீட்டு வரியில் 70 விழுக்காட்டு வரித் தொகையான 27.5 மில்லியன் வெள்ளியை வசூலிக்கும் இலக்கை கழகம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :