NATIONAL

மலேசியா பாரு” உணர்வு மேலோங்கட்டும் – அமைச்சர் ஸுரைடாவின் பொங்கல் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன.14:

நாடு முழுவதிலும், பொங்கல் திருநாள் எனும் உழவர் திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்தியர்களுக்கும் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் சுரைடா கமாருடின் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பொங்கல் திருநாள் என்பது நமக்கு பல வளங்களை வாரி வழங்கும் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு விழாவாகும். இது தமிழர்களின் நாள்காட்டியில் தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இது இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் அர்த்தம் பொதிந்த ஒரு கொண்டாட்டமாகும். இந்நன்னாளில் பாலுடன் சர்க்கரை கலந்து பொங்கலிட்டு தங்கள் வாழ்க்கையும் இது போல் தித்திப்பாய் இருக்கும் என்று நம்புகின்றனர்.

பாக்காத்தான் அரசாங்கம் குறிப்பாக வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு வழங்கும் வாய்ப்புகளை இந்திய சமூகம் நன்கு பயன்படுத்திக் கொள்வதோடு “மலேசியா பாரு” எனும் உணர்வோடு அனைத்து இனங்களோடு நட்புறவு கொள்ள வேண்டும். அதோடு, நாடு வலுவான சமூக பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு பாடுபடும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதோடு.

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் அமைச்சர் சுரைடா தனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :