SELANGOR

மாநிலத்தின் சுபிட்சத்திற்காக அனைத்து இனங்களின் உரிமை பேணப்படும்

பத்து கேவ்ஸ், ஜன.21:

சிலாங்கூரின் சுபிட்சத்திற்கும் வளப்பத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது சமய பேதமின்றி இதர இனத்தவரின் உரிமைகளைப் பேணுவதே ஆகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் சுபிட்சமானது பூர்வ குடியினர் உட்பட மலாய், சீன, இந்தியர்கள் என அனைத்து இனத்தவருக்கும் பொதுவானது என்றார் அவர்.

தான் ஒரு முஸ்லிம் என்றாலும் இனபேதமின்றி அனைத்து சமயத்தவரின் உரிமையைப் பேணுவதாக தாம் உறுதிப் பூண்டுள்ளதாக அவர் சொன்னார்.

எனவே, மாநிலத்தின் வளப்பம் மேலும் செழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று சிலாங்கூர் மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் தைப்பூசத் திருவிழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து அமிருடின் பேசினார்.


Pengarang :