NATIONAL

மார்ச் 2இல் செமினி சட்டமன்ற இடைத்தேர்தல்

புத்ரா ஜெயா, ஜன.18:
சிலாங்கூர் செமினி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் மார்ச் 2ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தேதி நிர்ணயித்துள்ளது.

எஸ்பிஆர் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு சந்திப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் தேர்தல் ஆணைய தலைவர் அஸார் அஸிசான் செய்தியாளர் கூட்டத்தில் இதனை அறிவித்தார்,

முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் பிப்ரவரி 25 நடத்தப்படும் வேளையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய 14 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இடைத்தேர்தலுக்கு வெ.1,8 மில்லியன் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் 2018ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டு வரையில் வாக்காளர்களாகப் பதிந்து கொண்டவர்கள், இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவர் என்றும் அவர் சொன்னார்.

செமினி சட்டமன்ற தொகுதியில் 54,503 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 951 பேர் முன்கூட்டியே வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வேளையில் 32 பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.


Pengarang :