SELANGOR

யுனிசெல் பசுமை திட்டத்திற்கு வெ20 ஆயிரம் ஒதுக்கீடு

பெஸ்தாரி ஜெயா, ஜன.18:

யுனிசெல் எனும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் பெஸ்தாரி ஜெயா வளாகத்தில் மரங்கள் நடும் திட்டத்திற்கு மாநில அரசாங்கம் 20 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தனது வளாகத்தை பசுமையாக்கும் யுனிசெல்லின் நல்ல நோக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்படுவதாக சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், பயனீட்டாளர் விவகாரம் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் விவகாரத் துறை ஆட்சி குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் கூறினார்.

பல்கலைக்கழக வளாகத்தின் சுற்றுச் சூழலை பசுமையாகவும் அழகாகவும் வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யுனிசெல், பூங்காவிற்கு மத்தியில் பல்கலைக்கழகமாக உருமாற்றும் எண்ணம் ஈடேற அதன் முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
யுனிசெல் பெஸ்தாரி ஜெயா வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் இயக்கம் மற்றும் பசுமை திட்டத்தை தொடக்கி வைத்தபோது அவர் மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :