NATIONAL

வருமான வரி, ஜிஎஸ்டி பாக்கி கட்டம் கட்டமாக திரும்ப ஒப்படைக்கப்படும்

புத்ரா ஜெயா, ஜன.18:

திரும்ப செலுத்தப்படாத பொருள் சேவை வரி பாக்கியை செலுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டதுபோல். 18 பில்லியன் வெள்ளி வருமான வரி மற்றும் 19 பில்லியன் வெள்ளி ஜிஎஸ்டி பாக்கி தொகை யாவற்றையும் அடுத்த 10 மாதங்களில் அரசாங்கம் கட்டம் கட்டமாக திரும்பச் செலுத்தும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

இந்த பாக்கி தொகை அனைத்தையும் அரசாங்கம் நிச்சயம் திரும்ப ஒப்படைத்துவிடும் என்றாலும் அவை மிகப் பெரிய எண்ணிக்கையாக இருப்பதால், கட்டம் கட்டமாகவே செலுத்தப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

“இந்தத் தொகையை மொத்தமாக ஒரே தவணையில் செலுத்துவது சிறந்த நடவடிக்கையாக இருக்காது என்பதால் இம்முடிவை அரசு எடுத்துள்ளது.”

நடப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தத் தொகையை பல தவணைகளில் செலுத்தாமல், ஒரே தவணையில் ஒட்டு மொத்தமாக செலுத்துவது ஏன் என்று வங்கிகள் அரசை வினவக்கூடும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :