NATIONAL

வாகனத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் 40 முக்குளிப்பு வீரர்கள்

ஜோர்ஜ்டவுன், ஜன.22:

கடலில் விழுந்த எஸ்.யு. வி வாகனத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் 4 வகையான படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடந்த ஒரு விபத்தின்போது இந்த வாகனம் பாலத்தில் இருந்து கடலில் விழுந்தது.

இந்த நடவடிக்கையில் கடல் காவல் சுற்றுப் படை, அரச மலேசிய கடற்படை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என தேசிய கடல் காவல் சுற்றுச் படையின் கொமாண்டர் ஏசிபி ரோஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

இந்நடவடிக்கையின் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இரு முக்குளிப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபடுவர். பின்னர் மற்ற இரு வீரர்கள் அப்பணியைத் தொடர்வர் என்று அவர் விளக்கமளித்தார்.

பிறை நோக்கிச் செல்லும் பினாங்கு பாலத்தின் 4ஆவது கிலோமீட்டரில் விபத்து நிகழ்ந்த இடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று மாலை 4 மணி அளவில் பாலத்தின் 34ஆவது தூணுக்கு அருகில் மூழ்கியிருந்த சம்பந்தப்பட்ட வாகனத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

ஆயினும், கடுமையான அலை மற்றும் கடலின் அடிமட்டத்தில் ஒளி குறைவாக இருந்ததால், வாகனத்தில் வடத்தை இணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்நடவடிக்கை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :