NATIONAL

வெ.5 லட்சம் போலி கோரிக்கை : திரெங்கானு சட்டமன்ற உறுப்பினருக்கு 13 நாள் தடுப்புக் காவல்

கோலதிரெங்கானு, ஜன.21:

செயல்படுத்தப்படாத திட்டங்களுக்காக கடந்தாண்டு 5 லட்சம் வெள்ளி கோரிய டத்தோ விருது பெற்ற திரெங்கானு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூன்று நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இவரது தடுப்புக் காவல் இன்று தொடங்குவதாக கோலதிரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்ற துணைப் பதிவாளர் நோரடிலா அப்துல் லத்திபா .கூறினார்.

தனது சட்டமன்ற தொகுதியின் சுற்று வட்டாரத்தில் இன்னும் மேற்கொள்ளப்படாத 32 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகக் கோரும் போலி ஆவணங்களை மாநிலத்தின் வட்டார அலுவலகத்தில் இவர் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009ஆம் ஆண்டு 18ஆவது சட்டத்தின் கீழ் இவர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் பட்சம் 20ஆண்டுகள் சிறை மற்றும் இவர் கோரிய தொகையைக் காட்டிலும் 5 மடங்குக்கும் குறையாத அபராதம் விதிக்கப்படலாம்.


Pengarang :