SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் மின்சாரப் பேருந்து 2025 “விவேக மாநிலத்திற்கு” ஏற்றது

ஷா ஆலம், ஜனவரி 9:

இலவச பேருந்து சேவையில் மின்சாரப் பேருந்துவைப் பயன்படுத்தும் பரிந்துரையானது மாநிலத்தை 2025க்குள் விவேக மாநிலமாக உருவாக்கும் இலக்கிற்கு ஏற்ப அமைந்துள்ளது.
மின்சாரப் பேருந்தைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. தொழில்நுட்ப பயனீட்டால் பசுமையான சுற்றுச் சூழல், சிக்கனமான, போட்டியாற்றல் மிக்க மற்றும் பயன்பாட்டுக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்திருக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா கூறினார்.

மேலும், விவேக மாநிலமாக உருவாக்கும் நமது எதிர்கால இலட்சியத்துக்கு உகந்த திட்டமாகும் என்றார் அவர்.இங்கு நாம் பார்த்த மின்சாரப் பேருந்து விளக்க காட்சியில், நாம் விரும்பும் அனைத்து அதிநவீன தொழில்நுட்பங்களையும் அது கொண்டுள்ளது . ஆயினும் இவற்றைக் கொண்டு ஒரு சேவையை நாம் மதிப்பிட முடியாது. மாறாக, அது மக்களுக்கு எவ்வாறு பயன் தருகிறது என்பதே முக்கியம் என்றார் அவர்.

சுல்தான் சாலாஹுடின் அப்துல் ஷா கட்டடத்தில் இன்று காலை நடைபெற்ற, மின்சாரப் பேருந்து தயாரிப்பு நிறுவனமான ஆசியானா கெஞ்சானா , தங்கள் தயாரிப்பின் நன்மைகளை எடுத்துரைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் மந்திரி பெசார் மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :