NATIONAL

10,000 விபத்துகளுக்கு மறுசுழற்சி டயர்களே காரணம்!

புத்ரா ஜெயா, ஜனவரி 4:

நாட்டில் ஏற்படும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துகளுக்கு மறுசுழற்சி டயர் பயன்பாடே காரணம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார்.
மலேசிய நெடுஞ்சாலை வாரியம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி ஆண்டுதோறும் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு மறுசுழற்சி டயர் பயன்பாடே காரணம் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக அவர் சொன்னார்.

இதற்கு அடுத்த நிலையில், லாரி போன்ற கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன என்றார் அவர்.நாள்தோறும் ஏற்படும் பல்வேறு சாலை விபத்துகளில் 30 விபத்துகளுக்கு மறுசுழற்சி டயர் பயன்பாடு காரணமாக இருப்பது இந்த புள்ளி விவரம் வழி தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் கடுமையானது ஆகும். எனவே அளவுக்கு மீறிய சுமையை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களைக் கண்காணிக்கும் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மறுசுழற்சி டயர் பயன்பாடு பாதுகாப்பானது இல்லை என்றும் இங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.


Pengarang :