அன்வாருடனான நட்பு நீடிக்க அஸ்மின் பிரார்த்தனை! | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

அன்வாருடனான நட்பு நீடிக்க அஸ்மின் பிரார்த்தனை!

ஷா ஆலம், ஜன.7:

கெ அடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான தனது நட்பு இன்னும் பல காலத்திற்குத் தொடர பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இறைவனைப் பிரார்த்திக்கிறார்.

அஸ்மினை அவரது இல்லத்தில் தமது துணைவியாரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசாவுடன் டத்தோஸ்ரீ அன்வார் நலம் விசாதித்த போது, மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.


கெஅடிலான் முக்கிய தலைவர்களின் வருகை குறித்து அஸ்மின் டூவிட்டரில் தெரிவித்தார்.

கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலியின் வீட்டிற்கு அன்வார் வருகையளித்ததானது இந்த இரு தலைவர்களுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டுள்ளதாக பொறுப்பற்ற தரப்பு பரப்பிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

RELATED NEWS

Prev
Next