அரசின் சேவைகளைப் பிரபலப்படுத்தும் 3 டபள்யூ பெருவிழா – மந்திரி பெசார் பாராட்டு | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

அரசின் சேவைகளைப் பிரபலப்படுத்தும் 3 டபள்யூ பெருவிழா – மந்திரி பெசார் பாராட்டு

அம்பாங் ஜெயா, பிப்.11:

மாநில அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் சேவைகளையும் பல்வேறு உதவித் திட்டங்களையும் பிரபலப்படுத்தும் நடவடிக்கையான “ஆரோக்கியம், சமூக நலன், மகளிர்” (3 டபள்யூ) பெருவிழாவை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வரவேற்றார்.

“முன்பு நடத்தப்பட்ட சிலாங்கூர் சுகாதார பெருவிழாவை மேலும் விரிவாக கொண்டாடவே இந்த ”3டபள்யூ பெருவிழா” முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார் அவர்.


“இதற்கு முன்னர் சுகாதார பெருவிழா உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்தி வந்த வேளையில், இந்த பெருவிழாவானது ஆரோக்கியம், சமூக நலன், மகளிர் ஆகிய 3 அம்சங்கள் மீது கவனம் செலுத்துகிறது” என்று அமிருடின் தெரிவித்தார்.

இது ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி என்றில்லாமல், மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் மக்களுக்காக ஏற்படுத்தியுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் சேகரித்தல், வழங்குதல் மற்றும் பரவலாக அறிவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நிகழ்ச்சியாகும் என்றுஅவர் சொன்னார்.

RELATED NEWS

Prev
Next