ஒரே நாளில் 1000 ‘புரோட்டோன் எக்ஸ் 70” கார்கள் விநியோகம்! | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஒரே நாளில் 1000 ‘புரோட்டோன் எக்ஸ் 70” கார்கள் விநியோகம்!

கோலாலம்பூர், பிப்.9:

தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், அதன் புதிய தயாரிப்பான ‘புரோட்டோன் எக்ஸ்70’ எனும் விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தை (எஸ்யூவி) வாங்குவதற்கு பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின்போது ஒரே நாளில் 1000 வாகனங்களை விநியோகித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள 74 புரோட்டோன் 3 எஸ்/ 4 எஸ் மையங்களில் நடைபெற்றது.


இந்நிறுவனத்தின் முதல் விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தில் தனிச்சிறப்புகள் குறித்தும் அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயிற்றுவிக்கப்பட்டதாக புரோட்டோன் வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவித்தது.

இதன் வழி இந்த வாகன உரிமையாளர்கள் அதன் வேகத்தையும் சொகுசையும் முழுமையாக அனுபவிக்க இயலும் என்றும் அது கூறியது.

RELATED NEWS

Prev
Next