புற்றுநோய் சிகிச்சை உட்பட மருத்துவ உதவிகளுக்கு மாநில அரசு வெ.5 மில்லியன் ஒதுக்கீடு | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

புற்றுநோய் சிகிச்சை உட்பட மருத்துவ உதவிகளுக்கு மாநில அரசு வெ.5 மில்லியன் ஒதுக்கீடு

அம்பாங் ஜெயா, பிப்.11:

சிலாங்கூரில் மருத்துவ உதவித் திட்டத்திற்கு குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டத்திற்கு மாநில அரசு 5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த காலத்திலும் இந்தத் திட்டம் செயல்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட நோய்களுக்கு என வகை பிரிக்கப்படவில்லை என்று சுகாதார, சமூக நல, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் கூறினார்.


“இதற்கு முன்னரும் புற்றுநோய் நோயாளிக்கான உதவிகளை “இதர உதவிகள்” என வகைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புற்று நோய் எனத் தெளிவாக வகை பிரிக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், மாநில அரசாங்கம் மக்களின் பிரச்னைகள் முக்கியமாக சுகாதார விவகாரங்கள் மீது பரிவுடன் நடந்து கொள்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்பதே ஆகும் என்றும் அவர் சொன்னார்.

RELATED NEWS

Prev
Next