வெ. 90 மில்லியன் விவகாரம்: எஸ்பி ஆர் எம் சிலரை விசாரணைக்கு அழைக்கும்! | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

வெ. 90 மில்லியன் விவகாரம்: எஸ்பி ஆர் எம் சிலரை விசாரணைக்கு அழைக்கும்!

கோலாலம்பூர், பிப்.6:

பாஸ் கட்சித் தலைவரின் வங்கிக் கணக்கில் 90 மில்லியன் வெள்ளி வரவு வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சில தனிநபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) விசாரணைக்கு அழைக்கவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையிடமிருந்து பெற்ற புகாரைத் தொடர்ந்து எஸ்பிஆர்எம் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டதாக பெர்னாமா வட்டாரம் தெரிவித்தது.


“இந்த விசாரணை தொடர்பில் சில தனிநபர்களை ஆணையம் விரைவில் அழைக்கும். எனவே இந்த வழக்கு தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் ஆருடங்களை வெளியிட வேண்டாம்”. என்று ஆணையம் கேட்டுக் கொண்டது.

2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம் மற்றும் 2001ஆம் ஆண்டு பணச் சலவைத் தடுப்பு, தீவிரவாதத்திற்கான உதவிகள் தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கை வழி பெறும் வருமானச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படவிருப்பதாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

RELATED NEWS

Prev
Next