SELANGOR

அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்

ஷா ஆலம், பிப்.4:

இவ்வாண்டு கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு வரலாற்றுப் பூர்வமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு மே 9 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் மலேசியா பாரு சகாப்தத்தில் கொண்டாடப்படும் முதல் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் இது.

வாக்குறுதி அளித்தபடி புதுமைகளையும் மாற்றங்களையும் பக்காத்தான் ஹராப்பானும் மாநில அரசாங்கமும் நிறைவேற்றும் என்று மலேசியர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா கூறினார்.

“மலேசிய மக்களுக்காக மேலும் கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் இது” என்றார் அவர்.

ஊழல் மலிந்த ஓர் அரசாங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது என்பது ஓர் எளிதான காரியம் அல்ல என்று மலேசியர்கள் உணர்ந்துள்ளனர் என்று மேலும் சொன்னார்.

ஆயினும், இதனை ஒரு காரணமாக காட்டி தாம் உட்பட பாக்காத்தான் தலைவர்களும் மெத்தனப் போக்கை கொண்டிருக்க மாட்டார்கள் என்று அவர் உறுதி அளித்தார்.


Pengarang :