KUALA LUMPUR, 24 Mei — Menteri Tenaga Manusia, Kulasegaran A/L V Murugeson. –fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கட்டாய தொழிலாளர் விவகாரம்: ஆர்பிஏவுடன் அமைச்சு ஒத்துழைக்கும்

ஜோர்ஜ்டவுன், பிப்.12:

நாடு எதிர்நோக்கியிருக்கும் கட்டாய தொழிலாளர் விவகாரத்தைக் கையாள அமெரிக்காவைச் சேர்ந்த உலக அறநிறுவனத்துடன் தொழிலாளர் ஆள்பல அமைச்சு ஒத்துழைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் தொழிலாளர்களின் உரிமையைக் காப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட பொறுப்புள்ள வர்த்தக கூட்டணியுடன் ( ஆர்பிஏ) மூலம் மலேசியாவின் தோற்றம் உயருவதோடு பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வ பயனை ஏற்படுத்தும் என்று அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

“கட்டாய தொழிலாளர் விவகாரத்தின் ஆணிவேரைப் பிடுங்குவதன் மூலம் நாட்டின் தோற்றத்தை நாம் மெருகூட்ட வேண்டும்” என்று கட்டாய தொழிலாளர் விவகாரம் குறித்த 2019ஆம் ஆண்டு வட்டார ஆர்பிஏ மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் குலசேகரன் தெரிவித்தார்.

கட்டாய தொழிலாளர் விவகாரம் உள்ள நாடுகள் மீது மேம்பாடடைந்த நாடுகள் அடிக்கடி வணிகத் தடைகளை விதிக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன என்று அவர் விளக்கமளித்தார்.


Pengarang :