NATIONAL

சிங்கப்பூர் – மலேசியா தண்ணீர் உடன்படிக்கை தீர்வு காண தாமதமாகலாம்

கோலாலம்பூர், பிப்.21:

1962ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தண்ணீர் உடன்படிக்கை மீதான விவாதம் முடிவுற சற்று கால தாமதமானாலும், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் நல்லதொரு தீர்வைக் காண முடியும் என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா நம்பிக்கைத் தெரிவுத்தார்.

இந்தத் தண்ணீர் விவகாரத்தில் அந்தக் குடியரசுடன் சந்திப்பு மற்றும் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கிவிட்டதே ஒரு முக்கிய அடைவு நிலையாக கருதப்படுகிறது என்றார் அவர்.

இந்த விவகாரம் குறித்து தாமும் குடியரசின் வெளியுறவு அமைச்சரும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக கூறிய சைஃபுடின், இதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் எந்தவொரு மேம்பாடும் இல்லாமல் இருந்தததை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் துன் மகாதீரும் சிங்கை பிரதமர் லீயும் இந்த விவகாரம் குறித்து நடத்திய பேச்சு வார்த்தையின் போது தங்கள் தரப்பின் நியாயத்தை எடுத்துக் கூறி விவாதிக்க தங்கள் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க இணக்கம் காணப்பட்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்துள்ளார்.


Pengarang :