NATIONAL

சீரழிந்துவிட்ட நாட்டை மறுசீரமைப்பது எளிய காரியமல்ல

செமினி, பிப். 25:

சீரழிந்துவிட்ட ஒரு நாடு அல்லது மாநிலத்தை சீர்படுத்துவது ஓர் எளிய காரியம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், சிலாங்கூரிலும் பினாங்கிலும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருந்தன. ஆயினும், பாக்காத்தான் ஆட்சி மலர்ந்த பின்னர் இவ்விரு மாநிலங்களும் மீண்டும் சீரடைந்தன என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சுட்டிக் காட்டினார்.

தற்போது மத்திய அரசாங்கமும் இதே சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது. ஆட்சிக்கு வந்து இன்னும் ஓர் ஆண்டுகூட நிறைவு பெறவில்லை என்றார் அவர்.

“எனவே, முந்தைய அரசுடன் பாக்காத்தான் அரசாங்கத்தை ஒப்பிடுவதும் அது கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளதாக கூறுவதும் சரியான செயலாகாது.. முந்தைய அரசின் நடவடிக்கைகளால் நாடு எதிர்நோக்கியுள்ள மோசமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு சில காலம் தேவைப்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்” என்றார் அவர்.

உதாரணமாக, தாபோங் ஹாஜி, பெல்டா போன்ற அமைப்புகள் பல கோடி வெள்ளி கடன்களைக் கொண்டுள்ளன என்பதை மக்கள் உணர வேண்டும்.. ஆனால், இந்தக் கடன்களை அடைக்க வேண்டிய பொறுப்பை நடப்பு அரசாங்கம் ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :