NATIONAL

சுகாதார சேவையை விரிவாக்கம் செய்ய சுகாதார இலாகாவிற்கு ஜாக்கிம் உதவத் தயார்

புத்ரா ஜெயா, பிப்.20:

மாநில அரசாங்கத்தின் சமயத் துறையில் பதிந்து கொண்டுள்ள சமயப் பள்ளிகளுக்கு சுகாதார சேவை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா உதவிடத் தயாராகவுள்ளது.

இத்திட்டமானது நாட்டில் உள்ள 92 மாநில சமயப் பள்ளிகள் மற்றும் 135 மக்கள் சமயப் பள்ளிகளைச் சேர்ந்த 83,252 மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அதன் இயகுநர் டத்தோ முகமது நோர்டின் இப்ராஹிம் கூறினார்.

“கல்வி அமைச்சின் கீழ் பதிந்து கொண்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைப் போல் இந்த மாணவர்களுக்கும் சுகாதார கல்வி, சுகாதாரப் பரிசோதனை, சிகிச்சை மற்றும் குறிப்புகளும் கிடைக்கும்” என்றார் அவர்.

இந்த சேவையானது சமயப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் ஒரு மதிப்புமிக்க சேவையாகும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :