NATIONAL

சுற்றுச் சூழலைப் பேண யூடிபி – ஜேபிஎஸ் ஒத்துழைப்பு

கோலாலம்பூர், பிப்.7:

சுற்றுச் சூழலைப் பேணுவதற்காக தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் வளத்தைப் பகிர்ந்து கொள்ள நீர் வடிகால் பாசனத் துறையுடன் (ஜேபிஎஸ்) பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (யூடிபி) ஒத்துழைக்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யூடிபி சார்பாக அதன் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் முகமது இப்ராஹிம் அப்துல் முத்தாலிப்பும் ஜேபிஎஸ் சார்பில் அதன் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது நோ அண்மையில் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் வழி விவேக வாழ்க்கை முறைக்காக யூடிபி சுய ஆற்றல் மேம்பாட்டு கழகம் (ஐஎஸ்பி) நீர் வடிகால் பாசனத் துறையுடன் கடற்கரை ஹைடிரோலிக் மற்றும் கரையோர பொறியியல் துறை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டம், பணியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு நல்கும். மேலும் இவ்விரு அமைப்புகளும் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடவும் சோதனைக்கூட வசதி மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இணக்கம் கண்டுள்ளன.

நீர் வடிகால் பாசனத் துறையின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தாங்கள் பெரிதும் வரவேற்பதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.


Pengarang :