NATIONAL

செமினியைத் தக்க வைப்பதே இலக்கு

ஷா ஆலம், பிப்.19:

செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவர்கள் கூறும் அவதூறுகள் மீது பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, இந்த சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைப்பதில் மட்டும் கவனம் செலுத்துவர்.

இந்தத் தொகுதி அம்னோ – தேசிய முன்னணி கோட்டை என்ற போதிலும் பக்காத்தானால் இதனைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, பக்காத்தான் பிரச்சாரக் கூட்டத்தில் வெறும் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக வெளியான பத்திரிகைத் தகவலை மறுத்த அமிருடின். அக்கூட்டத்தில் தாமும் கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஹில்மான் இடாம் மட்டுமே பேசிய போதும் தங்கள் உரைகளைச் செவிமடுக்க 500 முதல் 600 பேர் கூடினர் என்றார்.

வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. பக்காத்தான், தேசிய முன்னணி, மலேசிய சோஷிலிச கட்சி வேட்பாளர்களுடன் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் களத்தில் குதித்துள்ளார்.


Pengarang :