SELANGOR

செமினி இடைத்தேர்தல்: 60% இளைஞர்கள் பாக்காத்தானுக்கு வாக்களிப்பர்

ஷா ஆலம், பிப்.26-

செமினி சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலிலும் இளைஞர்களின் ஆதரவை பாக்காத்தான் கூட்டணி தக்க வைத்துக் கொள்ளும் என்று அதன் இளையோர் தேர்தல் இயக்குநர் முகமது ஹில்மான் இடாம் கூறினார்.

இத்தொகுதியில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 13 ஆயிரம் இளைஞர்களில் 60 விழுக்காட்டினர் பாக்காத்தான் வேட்பாளருக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளதாக பாக்காத்தான் இளைஞர் அணியின் பிரதான நடவடிக்கை அறையின் தகவல் மையம் கண்டறிந்ததாக அவர் சொன்னார்.

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள வேளையில், இங்குள்ள இளைஞர்களின் ஆதரவு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருப்பதாக ஹில்மான் தெரிவித்தார்.

“தற்போது நமது கவனம் , இன்னும் முடிவு எடுக்க முடியாமல் இருக்கும் 25 விழுக்காட்டு இளம் வாக்காளர்கள் மீது படிந்துள்ளது” என்று சிலாங்கூர்கினியிடம் அவர் கூறினார்.


Pengarang :