SELANGOR

செமினி வாக்களிப்பு தினத்தில் வானிலை தெளிவாக இருக்கும்

ஷா ஆலம், பிப்.27:

செமினி இடைத்தேர்தல் நடைபெறும் தினமான மார்ச் 2ஆம் தேதி வானிலை தெளிவாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆருடம் தெரிவித்தது.

தேர்தல் நடைபெறும் நாள் காலையில் வானிலை 27 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக தனது அகப்பக்கம் வாயிலாக அந்த ஆய்வகம் குறிப்பிட்டது.

“மாலை வேளையிலும் 30 முதல் 33 டிகிரி செல்சியஸ் என வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ” என்று அந்த ஆய்வகம் விவரித்தது.

அன்றைய வானிலை குறித்த  ஆருடத்தை மெட்மலேசியா பூகோளவியல் மற்றும் வானிலை நடவடிக்கை மையம் வெளியிட்டது.

செமினி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பக்தியார் முகமது நோர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :