SELANGOR

டிங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க ஊராட்சி மன்றத்துக்கு வெ.5 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப்.7:

கொசு ஒழிப்பு குறிப்பாக ஏடிஸ் கொசுக்கள் பரவும் பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்காக ஊராட்சி மன்றம் 5 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த டிங்கி காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக சுகாதாரம், சமூக நலன், மகளிர் குடும்ப நலத் துறைக்கான ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் கூறினார்.

“ஏடிஸ் கொசுக்கள் அதிகளவில் பரவும் பகுதிகளில் குறிப்பாக துப்புரவு செய்ய சிரமமான பகுதிகளில் டிங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க ஊராட்சி மன்றம் நடவடிக்கௌ எடுக்கும்.”

மேலும், டிங்கி காய்ச்சல் பரவும் பகுதிகளில் 50 விழுக்காட்டு பகுதிகள் மீது மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கையில் மாநில அரசாங்கம் ஊராட்சி மன்றத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :