NATIONAL

தண்ணீரின் விலையை விட நாசி லெமாக் விலை அதிகம்!

பூச்சோங், பிப்.18:

சிங்கப்பூரிடம் விற்கப்படும் மலேசிய தண்ணீரின் விலை மிகவும் மலிவாக உள்ளதால் அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வலியுறுத்தினார்.

தற்போது 1,000 கேலன் சுத்தரிக்கப்படாத தண்ணீர் 3 காசு என்ற விலையில் விற்கப்படுகிறது. இது ஒரு நாசி லெமாக் பொட்டலத்தின் விலையைக் காட்டிலும் குறைவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“அனைத்து பொருள்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ள வேளையில், சிங்கப்பூருக்கு விற்கப்படும் தண்ணீரின் விலை இன்னமும் 1,000 கேலனுக்கு 3 காசு என்று மாறாமல் உள்ளது” என்றார் அவர்.

மலேசியாவின் தண்ணீர் விலையைக் காட்டிலும் நாசி லெமாக்கின் விலை மகவும் உயர்வாக இருக்கிறது என்று தாமான் பூச்சோங் இண்டாவில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத் திடலில் நடைபெற்ற தேசிய சமூக கொள்கை அறிமுக விழாவில் ஆற்றிய உரையில் மகாதீர் குறிப்பிட்டார்.


Pengarang :