NATIONAL

நஜீப் ‘போஸ்கூ’ அல்ல; அவர் ஒரு திருடர்

செமினி, பிப்.13:

நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம், பணச் சலவை ஆகிய குற்றங்களுக்கான விசாரணையை ஒத்திவைத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் ஒரு ஹீரோ அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் குற்றமற்றவர் என்று கூறிக் கொள்ளும் ‘போஸ்கூ’ இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.

“இப்பொழுதுதான் அவர் சைக்கிள் ஓட்டுகிறார், ரொட்டி சானாய் சாப்பிடுகிறார், கைலி அணிகிறார். மேலும் கேமரன் மலைக்கு டாக்சியில் பயணிக்கிறார். செமினிக்குள் அவர் நுழைகிறாரா என்று பார்க்கப் போகிறேன்” என்றார் அவர்.

செமினியில் உள்ள மலாய்க்காரர்கள் கேமரன்மலை மலாய்க்காரர்கள் போன்றவர்கள் இல்லை. எனவே, ‘போஸ்கூ’ இங்கு வருவதை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

நஜிப் ஒரு போஸ் அல்ல மாறாக அவர் ஒரு திருடர் என்றும் யார் துரோகி என்பதை மக்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் விரைவில் காணப் போகிறார்கள் என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.


Pengarang :