NATIONAL

பாக்காத்தானின் இளம் வேட்பாளர் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார்!

செமினி, பிப்.25:

செமினி இடைத்தேர்தலில் பாக்காத்தான் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் முகமது அய்மின் ஜைனாலி பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது.

முகமது அய்மினைப் போலவே தாமும் தமது 31ஆவது வயதில் மக்கள் பிரதிநிதியாக முனைந்ததாக முஹிடின் தெரிவித்தார்.

மிகவும் இளமையான வயதில் சயிட் சாடிக் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராகியுள்ளார். இது பாக்காத்தான் அரசாங்கம் படைத்து வரும் புதிய வரலாறாகும் என்றார் அவர்.

என்னைப் போலவே இவர்களும் இளம் வயதில் பெரும் பொறுப்புகளைச் சுமக்கவும் அறிவுரைகளை ஏற்கவும் தயாராக உள்ளனர் என்று டான்ஸ்ரீ முஹிடின் கூறினார்.


Pengarang :