NATIONAL

பிரதமர்: அதிக மதிப்பிலான திட்டங்களை குறைக்கவோ அல்லது ரத்து செய்ய அரசாங்கம் எண்ணம் !!!

கிள்ளான், பிப்ரவரி 25:

அதிக மதிப்பிலான திட்டங்களை குறைக்கவோ அல்லது ரத்து செய்ய மத்திய அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார். கிழக்குக்கரை விரைவு ரயில் திட்டம் (ஈசிஆர்எல்) தொடர்பாக சீனாவின் அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்த வருவதாக வெளியான செய்தி குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

” எங்களை பொருத்த வரை இத்திட்டம் அதிகமான தொகையை கொண்டது. ரிம 55 பில்லியன் செலவிலான ஈசிஆர்எல் திட்டத்தின் கடனை திருப்பி செலுத்த 30 ஆண்டுகள் பிடிக்கும். இக்கடனை திரும்பி செலுத்தும் போது அதிகமான வட்டியை கட்ட நேரிடும். ஏறக்குறைய ரிம 140 பில்லியன் திருப்பி செலுத்த வேண்டும்,” என கிள்ளானில் மெத்ரோட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் கூறினார்.


Pengarang :